
Paryavaran Mitra 2013 Award Ceremony in Tamil Nadu
Paryavaran Mitra State level event was organized by Centre for Environment Education – CEE Tamil Nadu. In Tamil Nadu the programme is being executed as a State Level Competition. CEE holds the state level event on 21st March at ICSA Programme Centre, Egmore. 777 schools from 30 different districts of Tamil Nadu have been enrolled for this programme. Paryavaran Mitra Puraskar 2013 recognizes stakeholders in four different categories- Best District, Best School, Best Teacher and Best Student. The formally initiated by a welcome talk by Ms. S. Rejini of Centre for Environment Education, She gave the orientation about the PM 2013 and shared the glimpses about the Programme themes and overall handmade made through PM in Tamil Nadu. Dr. H. Malleshappa IFS, Director, Department of Environment gave the inaugural talk for the audience. Mr. P. Kuppusamy, Joint Director, SSA and Mrs. Jessie Jeyakaran, member of Zoo Educators Network & Zoo Climate Change Network, South Asia gave their inspirational talk. Around 50 participants composed of NGC co ordinators, officials of Chief Education Offices, Principals, Teachers and Students from Chennai and six other districts viz., Salem, Coimbatore, Madurai, Dindigul, Trichirapalli and Kanya Kumari has been participated in the event. Best districts awards were given by Dr. Malleshappa and Mr. Kuppusamy gave the Best School Awards. Best Teachers awards were distributed by Mrs. Jessie Jeyakaran and Mr. Shriji Kurup and Ms. S. Rejini, Programme Co ordinators of CEE have distributed the Best Student awards.


Hand Print of Paryavaran Mitra schools of Tamil Nadu-Paryavaran Mitra Puraskar Nominations 2013
Schools have not only carried out interesting action projects in the thematic areas but meticulously quantified their Hand Print (the positive actions towards sustainable development). Schools in the state make EE and ESD activities seem like they are a way of life! Check out the best school nominations
 |
தமிழ் நாட்டின் கல்வித் திட்டத்தில் பரியாவரன் மித்ரா
உலக அளவில் நீடித்த வளர்ச்சி மற்றும் கால நிலை மாற்றம் குறித்த மிகப் பிரமாண்டமான விழிப்புணர்வுக் கல்வி திட்டம் பரியாவரன் மித்ரா (சுற்றுச் சுழல் நண்பர்) திட்டமாகும். இது ஜூலை 24 ஆம் தேதி நாட்டின் சுற்றுச் சுழல் தூதர், முனைவர் திரு அ. ப. ஜை. அப்துல் கலாம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டில் இரண்டு கோடி மாணவர்களை நீடித்த வளர்ச்சிக்கு வழி வகுக்கவும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர் கொள்ளவும், உரிய செயல் திட்டங்களில் ஈடுபடும் பரியாவரன் மித்ரக்களை (சுற்றுச் சுழல் நண்பர்களை) உருவாக்குவதே ஆகும். இத் திட்டம் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சரவை, ஆர்சிலோர் மிட்டல், மற்றும் சுற்றுச்சுழல் கல்வி மையத்தின் (சிஇஇ) கூட்டு முயற்சியாகும்.
இத்திட்டம், கௌன் பனேகா பாரத்கா பரியாவரன் அம்பாசடர் ("இந்தியாவின் சுற்றுச் சுழல் தூதர் யார்?") என்ற இயக்கத்தின் மேல் உருவானது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள், மூன்று வருடங்களில் (2010 - 2013) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்தியா முழுவதிலும் உள்ள இரண்டு இலட்சம் பள்ளிகளுக்கிடையே உறவுகளை உருவாக்கித் தருவதே ஆகும். இது 11 முதல் 15 வயதுக்குட்பட்ட 6, 7, 8, மற்றும் 9 ஆம் வகுப்பு மானவர்களுக்குகென குறிப்பாக உருவாக்கப்பட்டதே!
மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், மனித வளத்தை நல்ல முறையில் பயன்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியும் சுற்றுச்சூழல் மேம்பாடும் ஒருங்கே நிகழவும், சமுதாய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வாய்ப்புகளை அளிக்கவும், பெண்களுக்கு உரிமை அளித்து கல்வி பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தை சுற்றுச் சுழல் தூதர், முனைவர் திரு அ. ப. ஜை. அப்துல் கலாம் எடுத்துக் கூறினார்.
சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் தமிழ் நாடு கிளை அலுவலகம் பல பள்ளி கல்வி திட்டங்களில் பங்கேற்று செயலாற்றி வந்துள்ளது. அதில் பெற்ற அனுபவத்தினால் பல அரசுத் துறைகளுடன்--குறிப்பாக பள்ளி மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன்--இனைந்து ஒரு உத்தியை தயாரித்து உள்ளது.
இதன்படி, தேசிய பசுமைப் படையின் ஆதார நிறுவனமான தமிழ் நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, மற்றும் தமழ் நாடு பள்ளிக்கல்வி துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக தமிழகத்தில் 25000 பள்ளிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது. மேலும் இவ்விரு துறைகளும் இத்திட்டத்தின் பொருட்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் (2010-2011) இத்திட்டம் மாநில அளவில் நடத்தப்படும் ஒரு போட்டியின் வாயிலாக செயலக்கப்படுகிறது. இதற்கென கீழ் காணும் பதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது
- போட்டி குறித்த விவரங்களை அளிக்கும் சுவரொட்டி
- பதிவு செய்தல் மற்றும் அறிக்கை தயாரிக்கும் மாதிரிப் படிவம்
- செயல்திட்டங்களை செயலாகும் ஆலோசனைகளை வழங்கும் ஆசிரியர் கையேடு
தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இப்போட்டியில் பங்கேற்க்கலாம். இதற்கு தமிழ் நாடு கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்கள் அனுப்பும் அறிக்கைகளை பொருத்தும் அவர்கள் அனுப்பி இருக்கும் ஆதாரப் படங்களை பொறுத்தும் மாவட்ட்டத்திற்கு ஒரு பள்ளி என ஒரு பள்ளி தேர்வு செய்யப்படும். இப்பள்ளிகள் ரூ. 5000/- பெறுமானமுள்ள பரிசினையும், நற்சான்றிதழையும் பெறும்.
மேலும் மாநில அளவில் ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு மாநிலத்தில் மிகச்சிறந்த பள்ளி என தேர்வு செய்யப்படும். அப் பள்ளி ரூ. 15000/- பெறுமானமுள்ள ஒரு பரிசையும் நற்சான்றிதழையும் பெருவர்.
Click here for Reporting Format for Schools
Paryavaran Mitra Poster
 
Paryavaran Mitra Booklet

Eco Club activity report

|
School Enroled
NGC School List
CEE TamilnaduPlot No.912, Flat No.5, K.K Flats
Kalaivaanar Street
Ramnagar Northern Extension
Madipakkam
Chennai 600 091
Tamil Nadu
Email:ceetamilnadu@ceeindia.org
|